அரசியல்

1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசு கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளை சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவை காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள காரணமாக இருந்தது[5]. நேரு விரைவாக காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.