கமலா கவுல்
என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 பிப்ரவரி 7 இல்
மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி
என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார். ஆனால் 1936 இல் புற்றுநோயால் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். இருந்தாலும் பின்னாளில் 1946 இன் வைசிராயான இலூயி மவுன்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுன்ட்பேட்டனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கருத்துகள் உண்டு[4]. அவரின் கடைசிக் காலத்தில் தன் மகளோடும் உடன்பிறந்தாள் விசயலட்சுமி பண்டிதையருடனும் வாழ்ந்தார்.