வாழ்க்கை வரலாறு

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் "சிகப்பு நகை" என்று பொருள், இச்சொல்லிலிருந்து "ஜவஹர்லால்" என்ற பெயர் உருவானது.
'காசுமீர பண்டிதர்' என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். (காசுமீரக் கால்வாயை குறிக்கும் சொல் நெகர் மருவி நேரு ஆயிற்று இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது).மோதிலால் நேரு பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார்.

இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட்டும் கிருஷ்ணாவும், ஆனந்தபவன் என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால், அன்று அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.